ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் “மக்களுடன் மஜக” என்ற மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தும் செயல் திட்டங்களை கையிலெடுத்து களமாடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று நெய்வேலி சுரங்கம் || விரிவாக்க திட்டத்திற்கு எதிராக நெய்வேலி NLC நிறுவனத்தை கண்டித்து பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர நெய்வேலி இப்ராஹிம் தலைமை வகித்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் S.ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்கறிஞர் தீ.சு.திருமார்பன், ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜலீல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் E.N.அறிவழகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி செயலாளர் V.K.முருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாகை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் A.H.M.ஹமீது ஜெகபர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே 65 கிராமங்களின் நிலத்தை கையகபடுத்தி அவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நிலங்களை இழந்த மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புகளுக்கு இதுவரை வழி செய்யவில்லை.
இந்த நிலையில் மேலும் 30 கிராமங்களை நிலக்கரி எடுப்புக்காக கையகபடுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே இப்பகுதி விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில், இது வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் இப்பகுதி வருவதால் கிராமப்புற நிலங்களை கையகப்படுத்துவது இயலாது என்பதை NLC நிறுவனத்திற்கு இப்போராட்டம் சுட்டிக்காட்டியது.
மண்ணுரிமை கோரி நடைபெறும் இப்போராட்டத்தில் பெண்கள் விவசாயிகள், தொழிலாளிகள் என சகல தரப்பினரும் பங்கேற்று ஆதரவு அளித்துள்ளனர்.
மாலை 5:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8.30 மணி வரை நீடித்தது.
7 மணி அளவில் கூட்டம் இன்னும் அதிகமாக திரண்டது.
பனியிலும் 1500-க்கும் அதிகமான மக்கள் திரண்டு எழுந்து முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் காரணமாக DIG இப்பகுதியல் முகாமிட்டிருந்ததார்.
S.P. தலைமையில் நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
NLC நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பிரமுகர்கலும், உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகளை முன்னிறுத்தி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை S.மன்சூர் மாவட்ட செயலாளர் கடலூர் (வ) மற்றும் நன்றியுரையை A. ரியால் ரஹ்மான் மாவட்ட பொருளாளர் கடலூர் (வ) ஆற்றினார்கள்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் 0.A.K.நூர்முகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் K. அஜிஸ்கான், அரியலூர் மாவட்ட செயலாளர் அக்பர், நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணைசெயலாளர் கடலூர் (தெ) A.முகம்மது ரபீக், மாவட்ட துணை செயலாளர் கடலூர் (தெ) V.முகமது ரியால்,மாவட்ட துணை செயலாளர் கடலூர் (தெ) A.முகமது இக்பால்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் K.S.பாபர் ஒலி, நெய்வேலி நகர செயலாளர் K.S.ஆதாம் சேட், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் A.மன்சூர், நெய்வேலி நகர பொருளாளர் P.ஜாகீர் உசைன், மாவட்ட MJTS செயலாளர் A. அப்பாஸ், மாணவர் இந்தியா கடலூர் மண்டல செயலாளர் R.முகம்மது முஸரப் ஆகியோர் உட்பட பங்கேற்றனர்.