74வது சுதந்திர தினம்.! மஜக செங்கை வடக்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா.!!


செங்கை:ஆக.15.,

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்டம் அனகை நகரத்தின் சார்பாா்காவும் பல்லாவரம் நகரத்தின் சாா்பாகவும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் நகர நிா்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் ஜிந்தா மதாா் அவர்கள் அனகை நகரத்தில் தேசியகொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பல்லாவரம் நகரத்திலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசரக் குடிநீா் மற்றும் முககவசங்களை வழங்கினாா்கள்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலாளா்கள் தாம்பரம் ஜாகீா் உசேன், தில்ஷாத், ஆலந்தூா் சலீம், மாவட்ட அணி நிா்வாகிகள் த.அப்துல்லா, எச்.அப்துல் சமது, பைசுல்லா மேலும் இஸ்மாயில், பம்மல் நகரச் செயலாளா் மஃக்பூல், அனகை நகரச் செயலாளா் சலீம், பல்லாவர நகர நிா்வாகி அஜீஸ் முஸ்தாக் ஆகியோா் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவடடம்
15-08-2020

Top