வேலூர்.ஆகஸ்ட்-15.,
நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நகரம் சார்பாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பள்ளிகொண்டா நகரச் செயலாளர் N.அஜீஜூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி வாழ் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் பள்ளிகொண்ட நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் D.ரங்கநாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரப் பொருளாளர் சத்தார் மற்றும் ரஹிம், இர்பான் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
15-08-2020