74வது சுதந்திரதினம்.! மஜக கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா!!


கோவை:ஆக.15.,

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் இரு இடங்களில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ், அவர்களும், உக்கடம் சாலையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், ABT.பாருக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசைன்,தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், சையத் இப்ராஹிம், மாணவர் இந்தியா திருப்பூர் மாவட்ட செயலாளர் நவ்ஃபல், மற்றும் சுவனம் அபு, அர்னால்ட் அக்கீம், ஜாகீர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவைமாநகர்மாவட்டம்
15.08.2020

Top