தூத்துக்குடி.ஆக.15.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் ICICI வங்கி அருகில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர பொறுப்புக் குழு தலைவர் மீரான் அவர்கள் தலைமையேற்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜீப் அவர்கள் முன்னிலையில் மஜக மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
நம் முன்னோர்கள் தியாகம் செய்து பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணி காப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் இப்னுமாஜா, அப்துர்ரஹ்மான், சம்சு கனி மற்றும் நகர வார்டு நிர்வாகிகள் மஜக-வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_மாவட்டம்
15.08.2020