பிப்.23.,
இன்று கோவையில் வாழ்வுரிமை மாநாடு குறித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA. அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்தும், மக்கள் வருகை குறித்தும், முழுமையாக விவாதிக்கப்பட்டது.
இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, துணை பொதுச் செயலாளர்கள் செய்யது அஹமது பாருக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர், தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாடு பணிகள் சூடு பிடித்து தமிழகம் முழுவதும் சுவர், விளம்பரங்களும் ஆட்டோ, விளம்பரங்களும், காணொளி, விளம்பரங்களும் செய்யப்பட்டிருக்கிறது.
லட்சக்கணக்கான மக்களை திரட்டும் வகையில் கொடிசியா, மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
23.02.2020