லால்பேட்டையில் மூன்றாம் நாள் தொடர் தர்ணாவில் JSரிபாயி பங்கேற்பு!

பிப்.23,
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை தடியடிக்கு சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இது தொடர் தர்ணா போராட்டமாக மாறியுள்ளது.

அவ்வகையில், கடலூர் தெற்கு மாவட்டம், லால்பேட்டையில் மூன்றாவது நாளாக தொடர் தர்ணா போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி பங்கேற்று குடியுரிமை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்.

மேலும், கடலூர் தெற்கு மஜக மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹீசைன், துணைச் செயலாளர் கியாசுதீன், முசரப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்தெற்குமாவட்டம்.