திண்டுக்கல்லில் தடையை மீறி மஜக ஜல்லிக்கட்டை நடத்தும்.

image

image

மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு

இன்று மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் திரள் போராட்டத்தை நடத்தினர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் உரையாற்றினர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதின் சுருக்கம் பின்வருமாறு

தமிழ்ச் சமுதாயத்தின் உறவுகளே….

தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமை காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இங்கு தேவரையாவின் வாரிசுகள், தீரன் சின்னமலையின் வாரிசுகள், காயிதே மில்லத்தின் உறவுகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழ் இன ஒற்றுமைக்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைப்போம்.

தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு, உலகம் முழுக்க வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெறுகிறது. தாய்லாந்து, ஸ்பெயின், மெக்ஸிகோ, நியுசிலாந்து என பல நாடுகளில் உள்ளது. வெளிநாடுகளில் போட்டி முடிந்ததும் காளைகளை கொன்று விடும் பழக்கம் உள்ளது. ஆனால் இங்கு போட்டி முடிந்ததும் காளைகளுக்கு பரிசளித்து கொண்டாடுகிறோம்.

ஆனால்,காளைகளை வதை செய்கிறோம் என்கிறார்கள், கேரளாவில் 100 யானைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.யானைகளை இதற்காக இம்சிக்கிறார்கள்.இதை உங்களால் தடுக்க முடியுமா?ராணுவத்தில் குதிரைப்படை இருக்கிறது, அங்கு பயிற்சிக்காக குதிரைகளை கொடுமைப்படுத்துகிறார்கள்.நீங்கள் குதிரைப்படை கலைத்து விடுவீர்களா?

நாய்க்கும்,பூனைக்கும் ஆபத்து என்றால் குதிக்கிறார்கள்.பீட்டா,புளுகிராஸ் போன்ற அமைப்புகள் வெளிநாட்டு நிதிபெறும் கூலிக்கும்பல் என விமர்ச்சிக்கப்படுகிறது.இவர்கள் மனிதர்களுக்கு பிரச்சினை என்றால் வாய் திறக்க மாட்டார்கள். உ.பி மாநிலத்தில் அக்லாக் என்பவர் வீட்டில் ஆட்டிறைச்சி வைத்திருந்தார். அவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அவரை அடித்து கொலை செய்தார்கள். யாரும் வாய் திறக்கவில்லை.

ஒட்டகம் குர்பானி கொடுக்க இவர்கள் இடையூறு விளைவித்தார்கள்.

மனிதர்களை கடிக்கும் வெறிநாய்களை அடித்தால்,இவர்கள் எல்லாம் நாயுரிமை காக்க ஓடி வருகிறார்கள். மேனகா காந்தி வீட்டிற்குள் நல்லபாம்பு நுழைந்தால் அவர் அதை அடிப்பாரா? நலம் விசாரிப்பாரா?

தங்கள் வீடுகளுக்குள் வீட்டு வேலைக்காரார்களை சித்ரவதை செய்பவர்கள், வெளியே விலங்கு உரிமை பேசுகிறார்கள்.

பாஜக தலைவர் இல.கனேசன் ஜல்லிக்கட்டு என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என போட்டியை நடத்தலாம் என்கிறார். அதாவது அம்மாவை அம்மா என்று சொல்லாமல் அப்பாவின் பொண்டாட்டி என சொல்லலாம் என்கிறாரா?

பாஜக தலைவி தமிழிசை அவர்கள் ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்கிறார். ஆனால் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தமிழகத்தில் தடையை மீறி நடத்தினால் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசு  தலைவர் ஆட்சியை அமல் படுத்துவோம் என மிரட்டுகிறார் அவர் ஒரு சகுனி.

இந்நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொன்ன முதல்வர் அண்ணன் OPS அவர்களை பாராட்டுகிறோம்.

பண்பாடு, கலாச்சாரத்தை சட்டம் போட்டு முடக்க முடியாது. சிறுவர்களுக்கு கூட தெறியும்  ஆடு மாடுகள் வீட்டு பிராணிகள் என்பது  மத்திய அரசில் இருக்கும் சில முட்டாள்கள் அதை காட்டு விலங்குகளின் பட்டியலில் இணைத்து ஜல்லிக்கட்டுக்கு தடை என்கின்றார்கள்.

சிங்கம் புலியை அடக்குவீர்களா? என சில மேதாவிகள் கேட்கிறார்கள். நீங்கள் அழைத்து வந்து கையில் கொடுங்கள் அப்புறம் அதை அடக்கலாம்.

ஒரு நீதிபதி ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடலாம் என்கிறார். மாடு மேய்ப்பதற்கு கூட ஒரு அறிவு வேண்டும் அந்த அறிவு கூட சில நீதிபதிகளுக்கு இருப்பதில்லை இந்தியா விவசாயிகளை கொண்ட நாடு என்பதையும், அவர்களுக்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்பதையும் புரிய வேண்டும்.

இதை புரிந்துக்கொண்டு தான் மாணவர், இளைஞர் சமுதாயம் களத்திற்கு வந்திருக்கிறது. முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தை இவர்கள் தான் வழி நடத்தினார்கள். இப்போது இனமான உரிமைக்காக போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு எங்களது #புரட்சிகர_வாழ்த்துக்களை_தெரிவித்துக்கொள்கிறோம்.

அலங்காநல்லூரில் தடையை மீறி மக்கள் ஜல்லிக்கட்டை நடத்துவார்கள்.மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனவரி 15 அன்று மாலை 3 மணிக்கு திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதனால்,மக்களின் உணர்வுகளை மதிக்கும் தமிழக அரசை கலைத்து விட்டு குடியரசு ஆட்சியை அமல்படுத்தினால்,டில்லியிலிருந்து யாரும் தமிழ் நாட்டிற்குள் கால் வைக்க  தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு பேசினார்.

இப்போராட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி,கொள்கைப் பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாயி அணிச் செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், கம்பம் கறீம்,மதுரை மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
மஜக_ஊடகப் பிரிவு (மதுரை மாவட்டம்)
13_01_17