மஜக குமரி மாவட்டசெயற்குழு கூட்டம்.! சாகுல்ஹமீது_பங்கேற்பு..!!

குமரி.பிப்.24..,

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம் 23-2-2011 மாலை இடலக்குடி-யில் மாவட்டச் செயலாளர் ரூபிஹர் அலி தலைமையில் மாவட்டப் பொருளாளர் சர்ச்சில் முன்னிலையில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாரூக், நெல்லை மாவட்டப் பொருளாளர் சேக்முகம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-29 அன்று நடைபெறும் கோவை வாழ்வுரிமை மாநாட்டில் திரளான மக்களை கலந்து கொள்ளச் செய்வது எனவும். மாநாடு சம்பந்தமான துண்டுப்பிரசுரம், ஆட்டோ விளம்பரம், தனிநபர் சந்திப்புகள் ஆகியவற்றை மேலும் தீவிரமாக செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட பொருப்பாளர்கள் ஹபீஸ்அலி, சாதிக், முஜிபுர்ரஹ்மான், அமீர்கான், ஐயப்பன், அகமதுஅஷரப், இஜாஸ்அகமது உள்ளிட்ட நகர நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்து கொன்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குமரி_மாவட்டம்
23-02-2020

Top