ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக தேர்தல் பணிக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பாட்டாளி படிப்பகத்தில் தொழிலாளர்கள் சந்திப்பில் நடைப்பெற்ற வாக்கு சேகரிப்பில் வேட்பாளருடன் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான K.V. தங்கபாலு, ஜோதிமணி MP ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும் துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் , மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா
மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், மண்டலம it wing செயலாளர் எக்சான், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட it wing செயலாளர் பாசித், இளைஞரணி திலிப், MJTS சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.