You are here

மக்கள் நல கோரிக்கைகளுடன் திருநெல்வேலி மாநகராட்சி மேயரை சந்தித்த மஜகவினர்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற செயல் திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையிலான நிர்வாகிகள் இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேயரை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் மூலம் நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பணியை விரைத்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளது உள்ளிட்ட பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மன்சூர் அலி, மஜக நிர்வாகிகள் முகம்மது மூசா, பேசர் அலி, திரு.முருகேசன், சம்சுதீன், அஸ்ரப் அலி, பாலமுருகன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Top