சென்னை.பிப் 6,
தலைநகர் டெல்லியில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் அமைதி போராட்டம் 74-வது நாளை எட்டியுள்ளது.
அதையொட்டி நாடு தழுவிய அளவில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இன்று தமிழக காவிரி விவசாய சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தோழர் P.R.பாண்டியன் அவர்கள் நேற்று இரவு விடுத்த அழைப்புக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்தது.
இன்று மதியம் 12.30க்கு தோழர் P.R. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற மறியவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்.
குறுகிய கால ஏற்பாட்டில் விவசாய சங்கத்தினரும், மஜக விவசாய அணியினரும் ஆர்வமுடன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மறியல் செய்து சாலையில் அமர்ந்தனர்.
போக்குவரத்தை முற்றிலும் முடக்காமல் ஒரு பகுதி சாலை அவசர தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது.
20 நிமிட மறியலுக்கு பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகளுடன் இதில் மாநிலச் செயலாளர் சீனி முகம்மது , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மிலலா கான், மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#தலைமையகம்
06-02-2021