நாகை தொகுதி கோரிக்கைகள்! சட்டமன்றத்தில் மு தமிமுன் அன்சாரி MLA எழுப்பினார்!


பி.06.,
(பாகம் 3)

ஜனவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி MLA„ அவர்கள் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைளை பேசினார்.

அடுத்தடுத்த புயல்கள், தொடர் மழை காரணமாக நாகை தொகுதி முழுக்க சாலைகள் பழுதடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

சாமந்தான்பேட்டை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என போராடுகிறார்கள்.

மீன்பிடி இறங்குதளம் அல்லது அதற்கு இணையான மாற்று திட்டம் ஒன்றை அங்கு அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நாகை மற்றும் நாகூர் கடற்கரைகளை மேம்படுத்தி தர இதே அவையில் பலமுறை பேசியிருக்கிறேன் அவற்றை விரைந்து நிறைவேற்றி தர வேண்டுகிறேன்.

அதே போல திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்றும் இதே அவையில் வலியுறுத்திருக்கிறேன்.

அதையும் செயல்படுத்தி தருமாறும் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல்
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
05.02.2021

Top