குவைத் மஜகவின் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி…!

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குவைத் சிட்டி பாலிவுட் உணவகத்தில் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மஜகவின் மார்க்க பிரிவாம் இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பாக கடந்த ரமலான் மாதத்தில் நடைபெற்ற தொடர் காணொளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்க மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முகம்மது அவர்கள் கிராத் ஓதி துவக்கியத்துடன் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்ணை தோழர்கள் பிரச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ.முகவை அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு இதுபோன்று இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்

இதில் வெற்றிபெற்ற மொத்தம் 8 நபர்களில் குவைத்தில் உள்ள 6 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தாயகத்தில் உள்ள 2 வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நேரடியாக அவர்களது முகவரிக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது

#பரிசுகள்_பெற்ற_வெற்றியாளர்கள் :
– நிரவி ஹாஜா நஜ்முதீன், குவைத்
– திட்டுச்சேரி நிஷான் ஹலீம், குவைத்
– லால்பேட்டை முஜம்மில், குவைத்
– செஞ்சி ஷேக் அக்பர், குவைத்
– சகோ.சையது இப்ராஹிம், குவைத்
– ஆயங்குடி முஹம்மது ரியாஸ், குவைத்
– நாகை முபாரக், இந்தியா
– ஆக்கூர் ரிபாயி, சவூதி அரேபியா

ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

இதில் மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லா, மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி, மண்டல தொழிலாளர் அணி செயலாளர் நெல்லை ஜமால் அலி, சகோ.நாசர் சலாவுதீன், மீடியா சகோதரர்கள் ஷேக் இஸ்மாயில், இனிக்கும் தமிழ் வல்லம் ரபீக் ராஜா, சகோ.ஸ்டீபன், சகோ நாசர், சகோ.சலீம், சகோ ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசளித்து பாராட்டினார்

தகவல் :
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#Humanitarion_Cultural_Association
#MJK_IT_Wings_Kuwait
குவைத் மண்டலம்.
24.09.21