கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்ட மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியும், அவர் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசு வேலையும் தர வேண்டும் என வலியுறுத்தி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முதல்வருக்கு கடந்த செப்.11 அன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் முதல்வரின் தனி செயலாளர் திரு.உதயசந்திரன் IAS அவர்களின் அலுவலகத்தில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 13.09.2021
Month:
வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் இன்று DGP அலுவலகம் சென்றனர். காவல் துறை இயக்குனர் திரு.சைலந்திர பாபு அவர்களிடம் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்தும், வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்தும் மனு ஒன்றை பொதுச் செயலாளர் அவர்கள் கையளித்தார். பிறகு உளவுத் துறை ADGP திரு.டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத் துறை IG திரு.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.09.2021
திருச்சுழியில் மஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர்,அவர்கள் தலைமையில் திருச்சுழியில் நடைபெற்றது. முகாமை திருச்சுழி பள்ளிவாசல் தலைவர் சிக்கந்தர், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்தான பாண்டியன், ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, வீர சோழன் நகர செயலாளர் அப்துல் மஜீத், ஸ்ரீ வில்லி புத்தூர் நகரச் செயலாளர் ஷாஜகான்,அருப்புக்கோட்டை நகர பொறுப்பாளர் மன்சூர், ஸ்ரீவில்லி புத்தூர் கூமாபட்டி நகர பொறுப்பாளர் சாதிக் அலி,ராஜ பாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 12.09.2021
மஜக கானத்தூர் கிளை பொதுக்குழு கூட்டம்.!மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி பங்கேற்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதிக்குட்பட்ட கானத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பகுதி செயலாளர் அப்துல் சமது தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிளையின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக வாணியம்பாடியில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட மஜக-வின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் அவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் L.தில்ஷாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ECR N.அப்துல் சமது, கண்டோன்மெண்ட் H.அப்துல் சமது, செங்கை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திருப்போரூர் ரபிக் மற்றும் மாவட்ட அணி நிர்வாகி அரங்கை A. முஸ்தபா, நகர நிர்வாகிகள் H.சேக் தாவூத், A.தமீனா, கானத்தூர் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு 12.09.2021
தஞ்சையில் மஜக டெல்டா மண்டல செயற்குழு… கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு!
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மொலா.நாசர், துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தார் ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், புதுக்கோட்டை துரை முஹம்மது, நெய்வேலி இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மஹ்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர்பாட்சா, விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர். நாகை, திருவாருர், தஞ்சை வடக்கு, தஞ்சை மாநகர், தஞ்சை தெற்கு, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை (கிழக்கு), புதுக்கோட்டை (மேற்கு), பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இதையொட்டி தஞ்சை மாநகரில் முக்கிய ரவுண்டானக்கள் மற்றும் சாலைகளில் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. காலை 9.30 முதலே மண்டபம் நிரம்ப