திருச்சுழியில் மஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர்,அவர்கள் தலைமையில் திருச்சுழியில் நடைபெற்றது.

முகாமை திருச்சுழி பள்ளிவாசல் தலைவர் சிக்கந்தர், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்தான பாண்டியன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, வீர சோழன் நகர செயலாளர் அப்துல் மஜீத், ஸ்ரீ வில்லி புத்தூர் நகரச் செயலாளர் ஷாஜகான்,அருப்புக்கோட்டை நகர பொறுப்பாளர் மன்சூர், ஸ்ரீவில்லி புத்தூர் கூமாபட்டி நகர பொறுப்பாளர் சாதிக் அலி,ராஜ பாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
12.09.2021