You are here

வசீம் அக்ரம் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடிதம்!

கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்ட மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியும், அவர் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசு வேலையும் தர வேண்டும் என வலியுறுத்தி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முதல்வருக்கு கடந்த செப்.11 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் முதல்வரின் தனி செயலாளர் திரு.உதயசந்திரன் IAS அவர்களின் அலுவலகத்தில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
13.09.2021

Top