மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனிஸ் மற்றும் நகர நிர்வாகிகளை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமலு MLA., அவர்கள் மஜக நிர்வாகியின் இல்லத்திற்கு வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும், தொகுதிக்கு தேவைப்படும் அனைத்துமுக்கிய பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்திடவும் தாம் முன்வருவதாகவும், எந்த கோரிக்கையாக இருந்தாலும் அது சார்ந்த கோரிக்கை மனு கொடுத்தவுடன் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் திருமதி.வி.அமலு MLA., அவர்கள் நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பில் திமுக சார்பில் நகர கழக பொறுப்பாளர் எஸ்.சௌந்தரராஜன், காகோ நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி, கோபாலகிருஷ்ணன் கே.தண்டபாணி, AITI மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, மஜக நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப், நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான், முஹம்மத் உசேன், அல்தாப் அஹ்மத், ஷபீக், சுஹேல்,கபீர் உள்ளிட்ட நகர, பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 12.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3576316305801452&id=700424783390633
Month:
தமிழக அரசுக்கு பாராட்டு! கர்நாடக அரசுக்கு கண்டனம்! மஜக தலைமை நிர்வாக குழுவின் தீர்மானங்கள்!
சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 12.07.2021 தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவைத் தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது பாரூக், மண்டலம் ஜைனுல்லாபுதீன், கோவை சுல்தான் அமீர், என்.ஏ.தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மண்டல வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவது என்றும், எதிர்வரும் ஆகஸ்ட் 5 அன்று சிறப்பு நிர்வாகக் குழுவை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. https://m.facebook.com/story.php?story_fbid=3575720782527671&id=700424783390633 1) புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி தலைமையிலான திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருவது அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர்
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!
மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மதிமுக பிரமுகர்கள் மல்லை. சத்யா, தென்றல் நிசார், வல்லம் பஷீர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். பிறகு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்ற திருச்சி மாவட்ட மஜக செயலாளர் பேரா.மைதீன் அவர்களின் வீட்டுக்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு ஆரிபா குழுமத் தலைவர் சுல்தான் ஆரிபின் அவர்களின் திருச்சி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினார். பிறகு திருச்சியில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுடன் படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து திருச்சி மாவட்ட மஜக நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்தார். அடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கூறிவிட்டு சென்னை புறப்பட்டார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #திருச்சி_மாவட்டம் 11.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3573712569395159&id=700424783390633
அமைச்சர் நேரு மற்றும் இனிகோ MLAவுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார். அப்போது அமைச்சர் திரு K.N.நேரு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ.இருதயராஜ் MLA., அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பொதுச்செயலாளர் அவர்களுக்கு இனிகோ.இருதயராஜ் MLA., அவர்கள் மதிய விருந்தளித்து சிறப்பு செய்தார். அப்போது திருச்சி மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அஹமது கபீர், திருச்சி மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சைய்யது முஸ்தபர், சேக் அப்துல்லாஹ், முகம்மது பீர்ஸா மற்றும் அணி நிர்வாகிகள் அன்வர், சல்மான், வாஹிது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 11.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3573411349425281&id=700424783390633
திருவல்லிக்கேணியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்..!
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், திருவல்லிக்கேணியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் முன்னிலையில் லத்தீப் தலைமையிலான இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் சலீம், பொருளாளர் ஷேக் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி ஆட்டோ கரீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_கிழக்கு 11.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3573295429436873&id=700424783390633