மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனிஸ் மற்றும் நகர நிர்வாகிகளை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமலு MLA., அவர்கள் மஜக நிர்வாகியின் இல்லத்திற்கு வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும், தொகுதிக்கு தேவைப்படும் அனைத்துமுக்கிய பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்திடவும் தாம் முன்வருவதாகவும், எந்த கோரிக்கையாக இருந்தாலும் அது சார்ந்த கோரிக்கை மனு கொடுத்தவுடன் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் திருமதி.வி.அமலு MLA., அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பில் திமுக சார்பில் நகர கழக பொறுப்பாளர் எஸ்.சௌந்தரராஜன், காகோ நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி, கோபாலகிருஷ்ணன் கே.தண்டபாணி, AITI மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, மஜக நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப், நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான், முஹம்மத் உசேன், அல்தாப் அஹ்மத், ஷபீக், சுஹேல்,கபீர் உள்ளிட்ட நகர, பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
12.07.2021
https://m.facebook.com/story.php?story_fbid=3576316305801452&id=700424783390633