கோவை தியாகி குமரன் மார்க்கெட் விவகாரம்! திமுக பொறுப்பாளர் கார்த்திக் அவர்களுடன்! அரசு அதிகாரிகளை சந்தித்த மஜகவினர்!


ஜூலை.13., கோவையில் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக பொறுப்பாளர் கார்த்திக், Ex. MLA, அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் 50 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அகற்றப்பட்ட 88 கடைகளை மாநகராட்சி வாக்குறுதி அளித்ததின்படி மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், நிர்வாகிகள், மற்றும் வியாபாரிகள், பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.07.2021