பூம்புகார் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மஜக பங்கேற்பு!


மார்ச்.21,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் அவர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் செம்பனார் கோவில் அருகாமையிலுள்ள அறுபாதி மைதானத்தில் நடைப்பெற்றது.

இதில் மஜக மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளரும்,பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொருப்பாளருமான ஆக்கூர் ஷாஜஹான் அவர்கள் கலந்து கொண்டு வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் வேலம்புதுக்குடி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் மஜக செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பூம்புகார்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
20.03.2021