ஜூன்:09., நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகிய இருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஸரப் அலி, மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ஐயப்பன், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் சுரேஷ் காணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் தொல்காப்பியன், கோட்டாறு இளங்கடை டிரஸ்ட் தலைவர் செய்யது தாமீம், மற்றும் தோழமை கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று
மதக்கலவரத்தை தூண்டும் நுபுர் சர்மா, நவின் ஜிண்டால் போன்றவர்களை கைது செய்யாமல் பாதுகாத்து வரும் ஒன்றிய பாசிச அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.
நிகழ்வின் இறுதியில் மாநகர பொருளாளர் ஐயப்பன், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ரபிக், மாவட்ட துணைச் செயலாளர் முகமது அசீம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகமது ராபி, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஷெரிப், மாநகர துணை செயலாளர் செய்யது முகமது, மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
08.06.2022