அம்பத்தூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு.!


சென்னை: மார்ச். 21.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், மற்றும் மதுரவாயல் தொகுதியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அம்பத்தூரில் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

திரளானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில் மஜக-வின் கொடிகள் அதிகளவில் பட்டொளி வீசி பறந்தது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
21-03-2021