ஜூலை 15., திருவாரூர் மாவட்ட மஜக பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லாவின் மகன் S. அன்சாரி மணமகனுக்கும், பாக்கம் கோட்டூரை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மகள் மணமகள் ஜாஸ்மின் அவர்களுக்கும் இன்று பாக்கம் கோட்டூர் ஜாமியா மஸ்ஜிதில் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது கூறியதாவது... கொரோனா காலத்தில் குறைவான நபர்களுடன் இத் திருமணத்தை அண்ணன் ஷேக் அப்துல்லா நடத்தியிக்கிறார். கொரோனா தொற்று அலைகள் எப்போது முடியும் என்று யாராலும் கூற முடியவில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என அர்விந்த் கெஜ்ரிவால்தான் முதலில் சொன்னார்.அது தான் இப்போது நடக்கிறது. கல்வி, வணிகம், சுற்றுலா ஆகியன பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் சம்பாதித்தவர்களின் அன்றாட வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. 30 ஆயிரத்திற்கும் கீழ் சம்பாதித்தவர்கள் கெளரவம் காரணமாக வெளியே கூற முடியாமல் நெருக்கடியில் திணறுகிறார்கள். வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. சம்பளம் குறைக்கப்படுகிறது. அங்கு புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. வருவாய் இழப்பு, பொருளாதார மந்தம் காரணமாக எங்கும் வாழ்வாதார நெருக்கடி நிலவுகிறது. கொரோனா ஏற்படுத்திய பல பாதிப்புகள் இன்னும்
Month:
மஜகவின் நல்லிணக்க அரசியல் காலத்தின் தேவையாகும்! செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! ஜூலை.14., மஜக வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் பொதுக்குழு கூட்டம் தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார். முன்னதாக கட்சியின் தொழிற்சங்கமான MJTS ன் கொடியை இந்து மிஷன் ஆஸ்பத்திரி எதிரே தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பொதுக் குழுவை முன்னிட்டு தாம்பரம்- ரங்கநாதபுரம் முழுக்க மஜக கொடிகள் கட்டப்பட்டு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அதில் புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டது. பொறுப்புக்கு இருவர் முன்மொழியப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெற்றது. அதில் தாம்பரம் . ஜாஹீர் உசேன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் துணைச் செயலாளர் ஷஃபி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர். பின்னர் அம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 இளைஞர்கள் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். நிறைவாக பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், மஜக சமூக
மூத்த தலைவர்களிடம் மஜக பொதுச்செயலாலர் மு.தமிமுன் அன்சாரி நலன் விசாரிப்பு..
ஜூலை.14,சமூகத்தின் மூத்த தலைவர்களான குணங்குடி அனிபா மற்றும் O. U. ரஹ்மத்துல்லா ஆகியோரின் சென்னையில் உள்ள வீடுகளுக்கு சென்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நலம் விசாரித்தார். பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதுபோல் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்களையும் இன்று தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம். https://m.facebook.com/story.php?story_fbid=3581661705266912&id=700424783390633
மஜக மாநில செயலாளர் சீனி முகம்மதுவிடம் நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…
சென்னை.ஜூலை.13., சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது நலம் பெற்று வரும் மஜக மாநிலச் செயலாளர் சீனி முகம்மது அவர்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். தற்போது பூரண சுகம் அடைந்திருப்பதாக கூறிய அவரிடம், விரைவில் தீவிர களப்பணிகளில் முன்பு போல இயங்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார். தற்போதைய அரசியல் பணிகள் குறித்தும் இருவரும் உரையாடினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்சென்னை 13.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3578896278876788&id=700424783390633
கோவை தியாகி குமரன் மார்க்கெட் விவகாரம்! திமுக பொறுப்பாளர் கார்த்திக் அவர்களுடன்! அரசு அதிகாரிகளை சந்தித்த மஜகவினர்!
ஜூலை.13., கோவையில் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக பொறுப்பாளர் கார்த்திக், Ex. MLA, அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தனர். இச்சந்திப்பில் கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் 50 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அகற்றப்பட்ட 88 கடைகளை மாநகராட்சி வாக்குறுதி அளித்ததின்படி மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், நிர்வாகிகள், மற்றும் வியாபாரிகள், பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 13.07.2021 https://www.facebook.com/700424783390633/posts/3578002165632866/