You are here

மஜக தலைமையகத்திற்கு பேரறிவாளன் வருகை! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு!

ஜூன்:23,

31 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் அவர்கள், இன்று மாலை மஜக தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்டார்.

அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் அவர்களும் வருகை தந்தார்.

கடந்த மாதம் அவர் வருகை தரவிருந்த நிலையில், அப்போது ஒத்திப்போன இச்சந்திப்பு இன்று நடைபெற்றது.

பேரறிவாளன் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலையும், ஷாகின் பாக் என்ற நாவலையும் பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பில், அவரது விடுதலையில் நிகழ்ந்த பல அனுபவங்களை பேரறிவாளன் பகிர்ந்துக்கொண்டார்.

அவர் கூறும்போது , சட்டசபையில் உரிய நேரத்தில் தகுந்த சூழலை பயன்படுத்தி, நீங்களும், தனியரசும், கருணாசும் எடுத்த முயற்சிகள்தான், தனக்கு முதன் முதலாக பரோல் கிடைக்க வாய்ப்பாக அமைந்தது என்றும், அது பிறகு விடுதலைக்கான கட்டுடைப்பாகவும் அமைந்தது என்றும் நெகிழ்வுடன் கூறினார்.

தன்னைப் போன்று பாதித்தவர்களின் விடுதலைக்காக இனி உழைக்கப் போவதாகவும் கூறினார்.

மஜகவின் போராட்டங்களுக்கு நன்றி கூறிய அற்புதம்மாள் அவர்கள் , சென்னையில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 அன்று மஜக நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு அவசியம் வருகை தருவதாகவும் கூறினார்.

இச்சந்திப்பின் போது மஜக மாநில துணைச் செயலாளர்கள் அப்சர் சையது, அசாருதீன், மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் ஹாஜாமெய்தீன் , MJTS மண்டல செயலாளர் இப்ராகிம், மற்றும் மஜக பகுதி , வட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
23.06.2022

Top