வெளிநாடு வாழ் தமிழர் கோரிக்கைகள். அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…

இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளிநாடு வாழ் தமிழக மக்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிர் இழந்து அவர்களது உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரும்போது, அங்கு கால தாமதம் செய்யப்படுவது குறித்து கடிதம் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதுபோல் அங்கு இறக்கும் தொழிலாளர்களுக்கு கேரளாவைப் போல தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேஷிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தமிழ் பிரதிநிதிகளை நியமிப்பது, பர்மா தலைநகர் ரங்கூன்- சென்னை இடையே வாரந்திர விமான சேவை ஆகியவை குறித்தும் எடுத்துக் கூறினார்.

இதுதவிர சிறுபான்மை மக்கள் கோரிக்கைகள் குறித்தும் அந்த துறை சார்ர்ந்த அமைச்சர் என்பதால் எடுத்துரைத்தார்.

குறிப்பாக தனது முந்தைய சட்டசபை கோரிக்கையான, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு விடுதி கட்டுதல், தனது கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 15 கோடி மதிப்பிலான ஹஜ் இல்லம் கட்டுதல் ஆகியவற்றை சிறுபான்மை நலத்துறை மானிய விவாதத்தில் அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்து கூறினார்.

அவருடன் மஜக மாநில துணை செயலாளர் வல்லம் அகமது கபீர் அவர்களும் தஞ்சை மாவட்ட வக்பு பிரச்சனைகள் குறித்தும் அவர் கவனத்துக்கு கொண்டு சென்றார்.