
June:22.,
இறைத்தூதர் ” நபிகள் நாயகத்தை”அவதூறு பேசிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய கோரியும், புல்டோசர் கலாச்சாரம் எனும் பாஜக வின் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும்.
திருப்பூர் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் ஒளி, அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞரணி மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் , வரவேற்புரை நிகழ்த்தினார்.
மஜக மாவட்ட செயலாளர் B.A. மஜீத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் துரை வளவன், கொங்கு இளைஞர் பேரவையின் மாநகர செயலாளர் துரை தண்டபாணி, அல் அன்சார் நற்பணி மன்ற நிறுவனர் ஹாஃபிழ் கலந்தர், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் அ.சு பவுத்தன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் மங்கலம் காதர், மற்றும் ராயல் பாட்ஷா, முகமது உசேன், பாட்ஷா, மற்றும் நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சாதிக், நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்:
#மஜக_தகவல_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்
21.06.2022