பிப்..19., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 18.02.2021
Month:
மஜக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்!
தென்காசி.பிப்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் நகரம் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நகர செயலாளர் முகம்மது இத்ரீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர பொருளாளர் முகம்மது இஸ்மாயில், நகர துணைச் செயலாளர் மாலிக் , உசேன், ஷேக் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் மற்றும் நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாஹிர், வாவை A.இனாயத்துல்லா, தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் கப்பிளி காதர், மனித உரிமை மாவட்ட செயலாளர் அ.பீர் மைதீன் , நகர இளைஞரணி செயலாளர் முகம்மது ரபீக் , நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது ,
மாற்றுக்கருத்துகள் தான் ஜனநாயகத்தை அழகுப்படுத்தும்… மயிலாடுதுறையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!!
பிப்.17, மயிலாடுதுறை மாவட்ட மஜக துணைச் செயலாளர் அஜ்மல் உசேன் இல்ல மணவிழாவில் பங்கேற்க இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மாயவரம் வருகை தந்தார். அவருடன் மாநில செயலாளர் ராசுதீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், MJVS மாநில துணைச் செயலாளர் மாலிக் ஆகியோரும் வருகை தந்தனர். அவர் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை நேர்மையான முறையில் அணுகாமல், குறுக்கு வழியில் முடக்க மத்திய அரசு முயல்வதாகவும், ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பகிர்ந்த மாணவி திஷா ரவியை கைது செய்ததை கண்டித்தவர், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடாது என்றார். மாற்று கருத்துகள்தான் ஜனநாயகத்தை அழகுப்படுத்தும் என்றவர், அவரை விடுதலை செய்து சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். புதுச்சேரி மாநில அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், குடியரசு தலைவர் அவர்கள், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்திருப்பதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சரி காணப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் அங்கு காங்கிரஸ் MLA க்கள்
திருச்சி அரியமங்கலத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என தொடர்ந்து பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்புக் குழு தலைவர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ், சையது முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
MKP நியமன அறிவிப்பு.!கத்தார் மண்டல துணை செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை கத்தார் மண்டல துணை செயலாளர்களாக, 1) பரங்கிபேட்டை பாருக் அலைபேசி; 50526327 2.)மேலப்பாளையம் அல் பத்தாஹ் அலைபேசி; 55943014 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 15-02-2021