மே17 இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு.. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது சிறப்புரை..!!

மே 17 இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் தலைமையில் தாம்பரம் பாரதி திடலில் நேற்று (07.01.2023) நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்…

தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு தற்போது தென் மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் நடைபெறுகிறது. இனி தமிழகம் முழுவதும் நடத்துவதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

“ஆடு மாடு மேலே உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்….” என்ற பாடல் வரிகளை பாடி கால்நடைகளை குடும்ப உறுப்பினராக நினைத்து வளர்க்கிறோம். நாங்கள் எப்படி காளைகளை துன்புறுத்துவோம் என் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, தாம்பரம் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

இதில் செங்கல்பட்டு மாவட்ட செயளாலர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் சமது, ஆலந்தூர் சலீம் மற்றும் நகர, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.