You are here

பாமக சார்பில் NLC நிறுவனத்தை வெளியேற கோரி கண்டன பொதுக்கூட்டம்..!! மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் சிறப்புரை..!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 25-ஆயிரம் ஏக்கர் நிலங்களை பறிக்க துடிக்கும் என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நடத்தும் நடை பயணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று (07.01.2023) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் ஒலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மன்சூர், நகர பொருளாளர் ஜாகிர் உசேன் மற்றும் நகர, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top