You are here

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூர் செயல் அலுவளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் திட்டச்சேரி பேரூர் செயலாளர் ஹ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் தலைமையில் திட்டச்சேரி செயல் அலுவலர் அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இச்சந்திப்பில் திட்டச்சேரி பேரூராட்சியில் சாலை இல்லாத இரு பகுதிகளுக்கு சாலைவசதி செய்து தரவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், மாரியம்மன் கோவில் அருகே சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க கோரி மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Top