மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக கட்டமைப்பு பணிகள், குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் “மக்களுடன் மஜக” திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பிரச்சனைகளை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திற்கு கொண்டு சென்று, தீர்வுகள் காணுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் வர்த்தக அணி மாநில செயலாளர் யூசுப் ராஜா, மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகமது மஹ்ரூப், கொள்கை விளக்கங்கள் மாநில துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் குடந்தை ஆசாத், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இக்பால் சேட், இப்ராஹிம்ஷா, முகம்மது இப்ராஹிம், காதர் ஷரீஃப் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.