தஞ்சை மாநகராட்சி மேயருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை மத்திய மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் தஞ்சை மாநகராட்சி மேயர்.ராமநாதன் அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மேயர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர பொருளாளர் முஹம்மது காமில், மாநகர துணை செயலாளர் சேக் அப்துல்லாஹ், மாநகர இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர வர்த்தக அணி செயலாளர் முஹம்மது முபின், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.