வேலூர்.மார்ச்.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் காட்பாடி வடுகங்குட்டை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் சையத் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், மற்றும் ஹாஜிபூரா அயாத், வடுகங்குட்டை சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 08-03-2021
இளைஞர்களை ஈர்க்கும் மஜக
திருச்சி அரியமங்கலத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என தொடர்ந்து பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்புக் குழு தலைவர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ், சையது முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
எழுச்சி தொடர்கிறது!நூற்றுக்கணக்கனோர் மஜக வில் இணைந்தனர்! T எடப்பாளையம் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
அக் 24, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி T.எடப்பாளையத்தில் இன்று மாவட்ட அளவிலான மஜக வின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு மாவட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக வினர், இரு சக்கர வாகனங்களில் கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர். பொதுச் செயலாளருடன் மண்டல பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம்,மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், ஆகியோரும் பங்கேற்றனர். அங்கு அவ்வூர் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுச் செயலாளருடன் உரையாடினர். பிறகு பிரதான சாலையில் கட்சி கொடியை தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே பொதுச்செயலாளர் அவர்கள் கொடியேற்றி வைத்தார். பிறகு மரக்கன்று ஒன்றையும் ஊன்றினார். பிறகு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட உறுப்பினர் படிவங்கள் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், இக்கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற மஜக முழு முயற்சி செய்யும் என பலத்த ஆரா வாரத்திற்கிடையே கூறினார். பிறகு துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. அது போல்
இளைஞர்களை ஈர்க்கும் மஜக! திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!
செப்:21., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். ஆவடி மாநகர செயலாளர் S.சாகுல் அமீது அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் A.அக்பர் உசேன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் புதுமடம் அணீஸ், மாநிலத் துணைச் செயலாளர் சமீம் அகமது ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் P.பஷீர் அகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் M. முகமது இலியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம் 21-09-2020