எழுச்சி தொடர்கிறது!நூற்றுக்கணக்கனோர் மஜக வில் இணைந்தனர்! T எடப்பாளையம் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


அக் 24,

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி T.எடப்பாளையத்தில் இன்று மாவட்ட அளவிலான மஜக வின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக அங்கு வந்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு மாவட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக வினர், இரு சக்கர வாகனங்களில் கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர்.

பொதுச் செயலாளருடன் மண்டல பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம்,மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், ஆகியோரும் பங்கேற்றனர்.

அங்கு அவ்வூர் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுச் செயலாளருடன் உரையாடினர்.

பிறகு பிரதான சாலையில் கட்சி கொடியை தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே பொதுச்செயலாளர் அவர்கள் கொடியேற்றி வைத்தார். பிறகு மரக்கன்று ஒன்றையும் ஊன்றினார்.

பிறகு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட உறுப்பினர் படிவங்கள் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

இதில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், இக்கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற மஜக முழு முயற்சி செய்யும் என பலத்த ஆரா வாரத்திற்கிடையே கூறினார்.

பிறகு துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.

அது போல் துப்புரவு வாகனம் ஒன்றையும் பழுது நீக்கி மஜக சார்பில் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் அக்பர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் சவுக்கத், மருத்துவ சேவை அணி ஜாவித், கிளை செயலாளர் அமானுல்லா, துணை செயலாளர்கள் இஸ்மாயில், ஜாபர், ஷவுக்கத், பில்லா அப்துல், பொருளாளர் யாசீன், திருக் கோவிலுர் நகர செயலாளர் சாதிக் பாஷா மற்றும் சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#கள்ளக்குறிச்சி_பாராளுமன்ற_தொகுதி
24.10.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*