குவைத் மண்டல MKP சார்பாக முகக்கவசம் விநியோகம்!


அக்.24,
மஜக வின் வெளிநாட்டு பிரிவான குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பாக நேற்று (23/10/2020) தலைநகர் முர்காப் பகுதியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் முன்னிலையில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் முகக் கவசங்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

வெள்ளிக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் உறவுகளை சந்தித்து அளவளாவ குழுமியிருந்தவர்கள் மத்தியில் முகக் கவச விநியோகம் நோயின் தீவிரத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது.

வேலை இழப்பினால் துயருறும் தொழிலாளர்கள், சில பகுதிகளில் முகக்கவசம் கிடைக்காமல் அவதியுறுபவர்கள் மட்டுமின்றி MKP முன்னெடுத்திருக்கும் இலவச முகக்கவசம் வழங்கும் பணியினால் 400 க்கும் அதிகமானோர் பயனடைந்ததுடன் இப்பணியை தொடர வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

இந்நிகழ்வில் குவைத் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர், மண்டல வணிகர் அணி செயலாளர் SS நல்லூர் யாசின் மற்றும் திருவாடுதுறை ஆசிக் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்று முகக்கவசங்களை அனைவருக்கும் விநியோகம் செய்தனர்.

தகவல்,

#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKPitWING
#குவைத்_மண்டலம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*