இளைஞர்களை ஈர்க்கும் மஜக! திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!


செப்:21.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

ஆவடி மாநகர செயலாளர் S.சாகுல் அமீது அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் A.அக்பர் உசேன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் புதுமடம் அணீஸ், மாநிலத் துணைச் செயலாளர் சமீம் அகமது ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் P.பஷீர் அகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் M. முகமது இலியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
21-09-2020