தூத்துக்குடி:ஜன04., மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யனார் ஊத்து கிளையின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மஜக வின் அய்யனார் ஊத்து கிளை செயலாளர் செய்யது அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெரியவர்கள் என பலரும் ஆர்வத்தோடு வந்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மஜக வின் சேவை அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது, தாரிக், சதாம் உசேன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், முஜிபுர் ரஹ்மான், மற்றும் மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்யனாரூத்து கிளை பொருளாளர் சாகுல் ஹமீது, தலைமையில் துணை செயலாளர்கள் செய்யது இப்ராகிம், மைதீன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம் 03.01.2020
Month:
மஜக நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக இலவச மருத்துவ முகாம்..!
நெல்லை.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி, பெஜான்சிங் கண்மருத்துவமனை, திரவியம் எலும்புமுறிவு மருத்துவமனை, பொன்ரா மல்டி ஸ்பசாலிடி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் பேட்டை கலம் நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் கண் சிகிச்சைகள், எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், மேலும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு நெல்லை மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்கினார், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா முகாமை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட துணை செயலாளர் காயல் A1 மைதீன், கலம் பள்ளி தாளாளர் சேக் முஹம்மது அலி, பேட்டை வியாபாரிகள் சங்க துணைதலைவர் M.காமாட்சிநாதன், அமமுக சாகுல் (AC), மாவட்ட அணி நிர்வாகிகள் அப்பாஸ், முருகேசன், அப்துல்லா, ஜாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பேட்டை நகர நிர்வாகிகள் ஐடிஐ.சங்கர், அசன்கனி, மூர்த்தி, சம்சுதீன்,ஆதிமூலம், செந்தில் ஆகியோர் சிறப்பான
எடையூர் சங்கேந்தியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!
ஜன.02, திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் திராளானோர் பங்கேற்று தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை செயலாளர் அன்வர் ராஜிக் அவர்கள் தலைமையில் பொருளாளர் தௌலத் முகமத், சேக்தாவூத், நஸீர் ஆகியோர் செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 01.01.2021
பாகிஸ்தானில் கோவில் இடிப்பு.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!
பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் 1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலை அங்குள்ள மதவெறி கும்பல் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த அராஜகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து அவர்களை பாதுகாப்பதே ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் இது போன்ற வகுப்பு வாத போக்குகளை ஒடுக்குவது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பாகிஸ்தான் அரசு இச்சம்பவத்தை கண்டித்து, இப்பாதக செயலில் ஈடுபட்ட மதவெறியர்களை கைது செய்திருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம் பாகிஸ்தான் அரசே, அந்த கோயிலை மீண்டும் கட்டிக் கொடுத்து அங்குள்ள சிறுபான்மை இந்து சமுதாய மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாழ்படுத்தும் தீய சக்திகள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை வீழ்த்துவது மனித நேயம் உள்ள அனைவரின் கடமை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.01.2021
மஜக நெல்லை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..! இணை பொதுச்செயலாளர் JS ரிபாய் பங்கேற்பு..!
நெல்லை.ஜன.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் 01-01-2021 அன்று மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில், வண்ணார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய், மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தின் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர், மேலும் எதிர்வரும் 23-01-2021அன்று நெல்லையில் நடைபெற உள்ள மஜக தலைமை செயற்குழுவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யதுஅலி, காயல் A1 மைதீன், மனிதஉரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல்லா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்பஅணி #MJKITWING #MJK2021 #நெல்லைமாவட்டம் 01-01-2021