நெல்லை.ஜன.02.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் 01-01-2021 அன்று மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில், வண்ணார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய், மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தின் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர், மேலும் எதிர்வரும் 23-01-2021அன்று நெல்லையில் நடைபெற உள்ள மஜக தலைமை செயற்குழுவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யதுஅலி, காயல் A1 மைதீன், மனிதஉரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல்லா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்பஅணி
#MJKITWING
#MJK2021
#நெல்லைமாவட்டம்
01-01-2021