அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு! காணொளி நிகழ்வுகளில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


ஜனவரி:02.,

அமெரிக்காவில் வசிக்கும் தமிழக மக்கள் பல்வேறு பொது சேவை அமைப்புகளை முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

புத்தாண்டு, பொங்கல், பெருநாள் ஆகிய தினங்களில் நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

நேற்று 2021 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ° Tamul” என்ற அமைப்பு நடத்திய அறிவு சார் கருத்தரங்கில் தமிழகத்தை சேர்ந்த பல தலைவர்கள், அறிஞர்கள் காணொளி வழியே பங்கேற்றனர்.

அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உலக அமைதி, சமாதானம் ஆகியவற்றை முன்னிறுத்தி மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

உலக தமிழ் முஸ்லிம் மீடியா அமைப்பு நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிகழ்வுகளில் உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் பங்கேற்று நிகழ்வுகளை கண்டு களித்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
01.01.2021