மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் வெற்றி! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாருன் ரசீது நிறைவு செய்து வைத்தார்!


ஈரோடு:ஜன.02.,

மஜக வின் சார்பில் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் கடந்த அக் 17.10.2020 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டார வடையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகமெங்கும் பெரும் எழுச்சியோடு நடைபெற்ற இம்முகாம்கள் மூலம் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

இதன் நிறைவு நிகழ்வு 01.01.2021 இன்று ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் நகர செயலாளர் மைதீன் பேக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் பங்கேற்று உறுப்பினர் படிவங்களை பெற்று முகாமை மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது,Mcom. அவர்கள் நிறைவு செய்து வைத்தார், அவருடன் துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், உடனிருந்தார்.

பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில பொருளாளர் அவர்கள் கூறியதாவது,

மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருவதை தமிழக மக்கள் அறிவார்கள், தமிழகத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னுடைய கருத்தை கூறி மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக மஜக விளங்கி வருகிறது, இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் விதமாக 1லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கத்தோடு கடந்த 75 நாட்களாக தமிழகம் முழுவதும் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களையெல்லாம் இந்த கட்சியில் இணைகின்ற பணியை மனிதநேய ஜனநாயக கட்சியினுடைய தொண்டர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

சிறப்பு உறுப்பினர் சேர்க்கையின் முடிவு நாளான இன்று ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுள்ளது, இன்றோடு மஜகவில் லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், தங்களை கட்சியில் இணைத்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த நம்பிக்கையோடு அவர்கள் இணைந்தார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக மஜக தொடர்ந்து களப்பணியாற்றும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்பிக்கையோடு இந்தக் கட்சியில் இணைந்த அனைவரையும் வாழ்த்தி அரவணைத்து உங்களையெல்லாம் வரவேற்கிறோம் என்று இந்நேரத்தில் தெரிவிக்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஜனவரி 23ஆம் தேதி எங்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக தொண்டர்கள் முழங்கங்கள் எழுப்பிட கட்சியின் கொடியினை பொருளாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா, மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் அமீது, பாபுலால்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மற்றும் ஜமாத் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தியூர் நகர பொருளாளர் பரக்கத் அலி, நகர துணைச் செயலாளர்கள் சித்திக், பாருக், பிலால், இளைஞரணி செயலாளர் கரீம், மருத்துவ சேவை அணி செயலாளர் முகமது நிசார், மனித உரிமை அணி செயலாளர் சித்திக், வர்த்தக அணி செயலாளர் ஆதம், மாணவர் இந்தியா ஒன்றிய செயலாளர் ரபீக், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
01.01.2021