
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை 17.6.2022 அன்று நபிகளார் அவர்களைக் குறித்து அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உத்தரபிரதேசத்தில் அதற்காக குரல் கொடுத்த மக்களின் வீடுகளை இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR. பதுருதீன், சிங்கை சுலைமான், ஹனிஃபா, ஜாபர் சாதிக் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.