
ஜூன்.17.,
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில், நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும், பாஜகவின் வலது சாரி பயங்கரவாதத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா இழிவுப்படுத்தி பேசியதால் உலகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக மக்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்த விரும்புகிறோம்
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியது பாஜகவினர்தான்.
இந்திய மக்கள் பெரும்பான்மையோர் அவர்களை ஆதரிக்கவில்லை. இந்தியர்கள் ஒற்றுமையாக உள்ளோம்.
மோடி அரசு வெளிநாடுகளை சமாதானப்படுத்துகிறது. சரணாகதி அடைகிறது.
ஆனால் உள்நாட்டில் நுபுர் சர்மாவை பாதுகாக்கிறது. அவரை கைது செய்யவில்லை. இதை வைத்து பெரும்பான்மை வாதத்தை வலுப்படுத்தும் நான்காம் தர அரசியலை செய்கிறது.
நுபுர் சர்மா App india வுக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தனது பேச்சுக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இதை அமித்ஷா இதுவரை மறுக்க வில்லை.
வெளிநாட்டவர்களுக்கு ஒரு நிலைபாடு. உள்நாட்டில் ஒரு நிலைபாடு என்ற இரட்டை நிலையில் உள்ளார்கள்.
பிரதமர் மோடி இதில் தனது கள்ள மெளனத்தை கலைக்க வேண்டும். சர்வதேச பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க வேண்டும்.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதை கெடுக்க கூடாது.
இந்தியாவின் ஒற்றுமையை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
நுபுர் சர்மாவின் பேச்சுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்பு தொடர்கிறது .
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் அஃப்ரின் பாத்திமா என்பவர் வலைதளங்களில் வகுப்புவாதத்திற்கு எதிராக செயலாற்றியதை இவர்களால் பொறுக்க முடியவில்லை.
கருத்தை, கருத்தால் எதிர்க்கும் துணிச்சல் இல்லை.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா, அவரது வீட்டை புல்டவுசர் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்.
அவரது இல்லத்தை இடித்துள்ளீர்கள். உள்ளத்தை உடைக்க முடியுமா?
இல்லத்தை உடைக்கும் புல் டவுசர்கள் உங்களிடம் இருக்கலாம். ஈமானை (இறை நம்பிக்கை) இடிக்கும் புல் டவுசர்கள் உண்டா?
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், நுபுர் சர்மாவை கலவரத்தை தூண்டும் வழக்குகளில் கைது செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வுக்கு ஜமாத் தலைவர் மக்தூம் மைதீன் அவர்கள் தலைமையேற்றார்.
மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் ரபியுதீன், மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் தீன், சமூக ஆர்வலர் பொதக்குடி தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, மாவட்ட இளைஞர் துணைச் செயலாளர் ஜபருல்லா, கிளை நிர்வாகிகள் ஜலால்தீன், ரபி முஹம்மது, முனவர் ஹுசைன், தாஹிரப் பா, ஆசிக், மற்றும் கூத்தாநல்லூர் நகரம், அத்திக்கடை கிளை நிர்வாகிகள் உட்பட மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாருர்_மாவட்டம்
17.06.2022