You are here

புழல் சிறையிலிருந்து மஜக பொதுச்செயலாளருக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மடல்..!

image

image

சென்னை.ஆக.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மடல்..

பெரு மதிப்பிற்கும்,
மரியாதைக்குரிய தோழர். தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு..

வணக்கம் தோழர். சென்னை மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு நடத்தமுயன்று கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையிட்டிருக்கும் நடவடிக்கை குறித்து தொடர்ந்து எதிர்பினை நீங்கள் பதிவு செய்து வருவது எங்களை போன்ற இளம் இயக்கத்திற்கு பெரும் ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

இக்கைது குறித்து சட்டசபையில் கடந்த மாதம் (ஜுலை) கூட்டுத்தொடரில் தொடர்ந்து நீங்கள் எழுப்பி குரல் மிக முக்கியமானதும், ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாகும். எங்கள் விடுதலை மட்டுமல்லாமல் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் கொலைவழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆயுட் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒருமித்த கருத்தினை சட்டசபையில் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த உங்களுக்கும், உங்களுடன் இணைந்து நின்ற தோழர் தனியரசு MLA அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை
உரித்தாக்க அனுமதிக்குமாறு வேண்டுகிறேன்.

சாமானிய மக்களின் மீதான அடக்குமுறை, அரசியல் சிறைவாசிகள் மீதான விடுதலை குறித்தான விவாதம் ஜனநாயக தன்மையோடு சட்ட சபையில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் இன்றைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது. அதை நீங்கள் முறியடித்து எளிய மக்களின் குரலை ஓங்கி ஒலித்திருக்கீர்கள். இந்த போக்கு வரும் காலத்தில் மேலும் தீவிரமடைய வேண்டும்.

சட்டசபை மேலும் ஜனநாயகமாக்கப்பட வேண்டும் என்கிற தேவையை நீங்கள் பூர்த்திசெய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

சிறையில் நீங்களும், உங்கள் தோழர்களும் நேரில் வந்து எங்கள் நால்வரையும் சந்தித்தது எங்களுக்கு மகிழ்ச்சியை, உற்சாகத்தை, நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சிறையிலிருந்து மீண்டதும் உங்களை அவசியம் நேரில் சந்திக்கிறோம்.

உங்களது இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த இந்த பங்களிப்பிற்காக
என் சார்பிலும், மே பதினேழு இயக்கத்தின் சார்பிலும், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைகன்,இளமாறன்,அருண்குமார் சார்பிலும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை.
22.08.2017.

Top