கூம்பு வடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில் தடை ஆணை பெற்றுதந்த வழக்கறிஞர் ஷானவாஸ்கானுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!

image

image

கோவை.ஆகஸ்ட்.22., கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி 70 டெசிபில் அளவில்தான் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கோவை சுற்றியுள்ள
பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அதிலும் குறைவாக 30 முதல் 40 டெசிபில் அளவில்தான் பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாக காவல்துறையினர் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது போன்று , உத்தரவிற்கு மாறாக அத்துமீறி பள்ளிவாசலில் 30 முதல் 40 டெசிபில் என்ற குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தி தொடர்ச்சியாக ஒருதலை பச்சமாக நடந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவரும், வால்பாறை பார்கவுன்சில் தலைவருமான வழக்கறிஞர் ஷானாவாஸ் கான் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்டுத்துவதாகவும், காவல்துறை வேண்டுமென்றே
பொய்யாக வழங்கு தொடர்ந்து இருப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தக்கூடாது என காவல்துறையின் நடவடிக்கைக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கூம்புவடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில்
துரிதமாக செயல்பட்டு தடை ஆணை பெற்றுதந்த வால்பாறை பார்கவுன்சில் தலைவரும் வழக்கறிஞருமான ஷானாவாஸ்கான் அவர்களை நேரில் சென்று சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில
துணை பொதுச்செயலாளர்
AK.சுல்தான் அமீர், மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன்,
மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாரூக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுதீர், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு வாரிய இடத்தை மீட்கவும் அவர் சட்டரீதியான போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
22.08.2017