You are here

நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து..! சேதுபாவாசத்திரத்தில் மஜக ஆர்ப்பாட்டம்…!! துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!

தஞ்சை.ஜூன்.17.,

தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், சேதுபாவாசத்திரம் கிளை ஏற்பாட்டில், சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி விவாதாத்தில் உலகெங்கும் வாழும் 200கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் “நபிகள் நாயகம்” (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் அதை அமோதித்து சமூக வலைதளத்தில் எழுதிய நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்து.

மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், கோட்டைப்பட்டிணம் ஹாரிஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பெரியண்ணன் மற்றும் த.ம.வி.இ தலைவர் முனைவர். ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மஜக ஒன்றிய செயலாளர் நூரூல் அமீன் நன்றியுரையுடன் நிறைவு பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரை நகர துணை செயலாளர் பாசித் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உட்பட திரலானோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
17.06.2022

Top