மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி : திண்டுக்கல் மாவட்டத்தில் எழுச்சி!!!

image

image

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஊராளிப்பட்டி , வேல்வார்கோட்டை பிரிவு, கொட்டதுரை, புது களராம்பட்டி, சக்கி நாயக்கண்பட்டி, மா.மு.கோவிலூர் பிரிவு.
ஆகிய 6 கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி கட்சியின் பணிகள், குறிக்கோள், சேவை பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். பிறகு அப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் நுழைய முடியாத வடமதுரை ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி காலூன்றி அக்கிராம மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று சதவிகிததிற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் வாழும் இந்த 6 கிராமத்தில் முழுக்க முழுக்க இந்து சகோதரர்களால்                   மஜக ஆரம்பிக்கப்பட்டு மொத்த நிர்வாகத்திற்கும் இந்து சகோதர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது, இது அனைத்து சமுதாய மக்களுக்குமான கட்சி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடமதுரை ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கள் ஒன்றிய செயளாளர் குணசேகரன், ஊராளிப்பட்டி கிளை செயலாளர் ராசு, பொருளாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.Com அவர்களுக்கு சால்வை அணிவித்து அம்மக்களின் அடிப்படை பிரச்சினையாகிய சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்ற நம் கட்சி முயற்சி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அங்கே திரண்டிருந்த கிராம மக்களிடையே பேசிய மாநில பொருளாளர் “இக்கிராமத்தின் அடிப்படை வசதிகள் நிறைவேற மனிதநேய சொந்தங்கள் தொடர்ந்து பாடுபடுவார்கள்” எனக் கூறினார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
திண்டுக்கல் மாவட்டம்.