You are here

மஜக தலைமை நிர்வாகக் குழு வரவேற்பு…

image

image

சென்னை.பிப்.16., திட்டமிட்டப்படி இன்று காலை 10 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு பொதுச்செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி தலைமையில் கூடி இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக உரையாடியது.

நிலையற்ற தமிழக அரசியல் சூழலில், கவர்னர் அதிமுக சட்டமன்றக் குழு தலைவர்
எடப்பாடி. பழனிச்சாமி அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருப்பதை தலைமை நிர்வாகக் குழு வரவேற்கிறது. இதன் மூலம் குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில் பொருளாளர் ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா. நாசர்,
அவைத் தலைவர் மவ்லவி நாசர் உமரி, மாநிலச் துணைப் செயலாளர்கள் மவ்லவி மைதீன் உலவி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், தைமிய்யா, சாதிக் பாஷா, ராசூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவண்,
தலைமை நிர்வாகக் குழு
மனிதநேய ஜனநாயக கட்சி.
16.02.17.

Top