பாகிஸ்தானில் கோவில் இடிப்பு.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!


பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் 1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலை அங்குள்ள மதவெறி கும்பல் இடித்து சேதப்படுத்தி உள்ளது.

இந்த அராஜகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து அவர்களை பாதுகாப்பதே ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும்.

பாகிஸ்தானில் வளர்ந்து வரும் இது போன்ற வகுப்பு வாத போக்குகளை ஒடுக்குவது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

பாகிஸ்தான் அரசு இச்சம்பவத்தை கண்டித்து, இப்பாதக செயலில் ஈடுபட்ட மதவெறியர்களை கைது செய்திருப்பதை வரவேற்கிறோம்.

அதே சமயம் பாகிஸ்தான் அரசே, அந்த கோயிலை மீண்டும் கட்டிக் கொடுத்து அங்குள்ள சிறுபான்மை இந்து சமுதாய மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாழ்படுத்தும் தீய சக்திகள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை வீழ்த்துவது மனித நேயம் உள்ள அனைவரின் கடமை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02.01.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*