இளையான்குடியில் மஜக மரம் நடும் விழா! பொருளாளர் மற்றும் MP., MLA.,க்கள் பங்கேற்பு!!

image

image

image

சிவகங்கை.மார்ச்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் தெய்வபுஷ்ப ஊரனிகரையில் 04-03-2017 மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com., அவர்களும், தோழமை கட்சியான அஇஅதிமுகவின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான சகோதரர் #செந்தில்_நாதன் அவர்களும், அஇஅதிமுகவின் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் #மாரியப்பன்_கென்னடி அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.

முன்னதாக பேசிய மாநில பொருளாளர் ஹாருன் ரசீது அவர்கள் தன்னுடைய 43 வயதில் சுத்தம் செய்து பார்த்திடாத ஊரனியை முயற்சி எடுத்து சுத்தம் செய்த தப்பாத்தை சாகுல் அவர்களுக்கும் உதவியாக இருந்து செயல்பட்ட கான்சா உஸ்மான் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் இளையான்குடிக்கென்று ஓர் பண்புள்ளதாகவும் அனைத்து விஷயங்களுக்கும் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே மக்களிடம் பொருளாதார உதவியை பெற்றுசெயல்படுவோம். தற்போதும் அதே போல் மக்களிடம் பொருளாதார உதவி பெற்று ஊரனியை சுத்தம் செய்துவிட்டோம். ஊரனியை தூர்வாருவது பேவர்பிளாக் நடைபாதை அமைப்பது கண்மாய்கரையில் மின்கோபுர ஒளிவிளக்குகள் அமைப்பது போன்றவை அரசால் அமைக்க பட வேண்டியதாகும் என்றும் கூறினார்.

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி அவர்கள் மஜகவின் கடந்த ஓர் ஆண்டு செயல்பாடுகளையும், சட்டமன்றத்தில் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி.MLA., அவர்களின் சிறப்பான பேச்சுக்களையும் வாழ்த்தி பேசினார்.

பின்னர் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தங்களுடைய சொந்த கட்சியினரே பல முக்கிய மற்றும் பெரிய பதவிகளை அனுபவித்து விட்டு கட்சிக்கு துரோகம் இழைத்தபோது, கூட்டணி கட்சியாக இருந்தாலும் நாங்கள் நிர்பந்திகாத போதும் சுதந்திரமாக இருந்து நிலையானஅரசு அமைய மனிதநேய ஜனநாயக கட்சி உறுதுனையாக இருந்தது என்பதை நன்றியுடன் இந்த நேரத்தில் நினைவு கூறுவதாக கூறினார்.

மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேவர்பிளாக் நடைபாதை அமைக்க மேடையிலேயே 5,00,000 (ஐந்து லட்சத்தை) முதல் தவனையாக ஒதுக்குவதாகவும் மேலும் 5,00,000 (ஐந்து லட்சத்தில்) கண்மாய்கரையில் உயர்கோபுர எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்து தறுவதாகவும் கூறினார்கள்.

மேலும் திங்கள் கிழமை நமது நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஊரனியை தூர்வார அனுமதி பெற்று தறுவதாகவும் உறுதியளித்தார். கூட்டணி கட்சியின் கோரிக்கையை ஏற்பது எங்களின் கடமை என்றும் கூறினார்.

இந்த நிகழ்சியில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர்  கலந்து கொன்டனர்.

மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், அப்துல் ரஹ்மான் நகர் நிர்வாகிகள் செய்யது மஹபு, அஹமது சிராஜுதீன், சகுபர்சாதிக், ஆட்டோ சங்க நிர்வாகிகள் தஸ்லிம், அபுபக்கர், அஜ்மல், முஜிபுர் ரஹ்மான் மற்றும் உஸ்மான், முஸ்தபா மற்றும் தோழமை கட்சியின் அஇஅதிமுக நகர் செயலாளர் அன்வர், ஒன்றிய இளைஞர் அணிச்செயலாளர் வழக்கறிஞர் பாரதி உட்பட  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொன்டனர்.

இந்த நிகழ்சி சிறப்பாக நடைபெற மாவட்ட துனைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்திருந்தார்.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
சிவகங்கை மாவட்டம்
04.03.2017